டைக்குள் புகுந்து செல்போன் திருடும் சிறார் கும்பல்: சிசிடிவி காட்சிகள் வைரல்

ஆள் இல்லாத நேரம் பார்த்து கடைகளுக்குள் புகுந்து திருடும் சிசிடிவி காட்சி.
சென்னையின் மிகப்பெரும் வணிக மையமான கோயம்பேடு சந்தையில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் அங்கே தினந்தோறும் புதுவிதமான திருட்டு சம்பவங்கள் அவ்வப்பதெல்லாம் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் கோயம்பேடு பழங்கள் சந்தையில் ஆள் இல்லாத நேரம் பார்த்து கடை கடையாக நோட்டமிட்டு சிறார் கும்பல் ஒன்று செல்போனை திருடி செல்கிறது.யாராவது வருகிறார்களா என இரண்டு சிறார்கள் நோட்டமிட மற்றொரு சிறார் கடை கடையாக புகுந்து ஆராய்ந்து செல்போனை திருடி சென்றுள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோயம்பேடு சந்தையில் வணிகம் செய்வது அச்சுறுத்தலாக இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சம்பவத்தில் இருக்கும் சிறார்கள் அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu