செங்குன்றத்தில் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்

செங்குன்றத்தில் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்
X

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடந்த இலவச மருத்துக முகாமில் சுதர்சனம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

செங்குன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்குன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தி.மு.க. தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பேரூர் 17.வது வார்டு தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பிரசாந்த் மருத்துவமனை, டாக்டர் என்.எம்.டி. கோபால் இணைந்து சர்க்கரை, கொழுப்பு, ஈசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் கொண்ட இலவச மருத்துவ முகாமும் அறுசுவை உணவும் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய பிரதிநிதியுமான பேரூராட்சி கவுன்சிலருமான என்.எம்.டி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

வார்டு செயலாளர் ஆர்.கே.எஸ். சுரேஷ் வரவேற்றார். சி.கே. ஸ்ரீதர், வேன் சங்கர், டி.கோபால், எம்எஸ்ஆர். பாஸ்கர், எஸ்.ராஜா, எஸ்.அன்பு செல்வன், ஆர்கேஎஸ். சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்து அறுசுவை உணவு வழங்கினார்.

இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் ஜி.ராஜேந்திரன், புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜெய்மதன், பேரூராட்சி தலைவர் கு.தமிழரசி குமார், துணைத்தலைவர் ஆர்.இ.ஆர்.விப்ரநாராயணன், பேரூர் கழக அவைத்தலைவர் டி.அருள்தேவநேசன், துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், கே.கபிலன், எஸ்.முனீஸ்வரி சுகுமார், பொருளாளர் என்.சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதி ஆர்.டி. சுரேந்தர், ஒன்றிய பிரதிநிதிகள் பி.அன்பு, ஆர்எம்பி. குமார், ஜெ.ஜெய்மாறன், மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் இரா.ஏ.பாபு, எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், கா.கு. இலக்கியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future