சென்னையில் பட்டாசு வெடித்தபடி இரு சக்கரம் இயக்கிய நபர் மீது வழக்கு பதிவு.
சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட புகைப்படம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் சென்னையில் சாகசம் செய்தபடி பட்டாசுகளை வெடித்து அபாயகரமாக இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெருநகர பிரதான சாலையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கியபடி பட்டாசுகளை வெடித்த படி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதை அடுத்து தமிழக மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸார் சாகசத்தில் ஈடுபட்டு வந்தவர் பற்றி விரிவான விவரங்களை சேகரிக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தின் முன் வீல் தூக்கி படி பட்டாசு வெடித்த படி சாகசம் செய்த நபரின் பெயர் விவரங்களை தேடியதில்,இருசக்கர வாகனத்தின் எண் மற்றும் பெயரை சைபர் கிரைம் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த இளைஞர் மீது வழக்கு பதிவாக அதிக வேகமாக ஓட்டுதல், அபாயகரமான ஓட்டுதல், மேலும் ஒரு சில வழக்கு பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் இதுபோன்று சாகசம் செய்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாவளி பண்டிகையை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் சென்னையில் சாகசம் செய்தபடி பட்டாசுகளை வெடித்து அபாயகரமாக இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu