செங்குன்றம் தீயணைப்பு சார்பில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக தீ தொண்டு நாள், ஏப்ரல் 14 முதல், 20 வரை அனுசரிக்கப்படுகிறது. தீ பாதுகாப்பை அறிவோம் உற்பத்தியை அதிகரிப்போம் என்ற தலைப்பின் கீழ் தீப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி, பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், கும்மனூர் சி.எஸ்.சி ஆரம்பப் பள்ளி, வடகரை மேல்நிலைப்பள்ளி, ஆல்பா ஸ்கூல், சில்ட்ரன் பேரடைஸ் மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளில் கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடததப்பட்டன.
இதேபோல், செங்குன்றம் பேருந்து நிலையம், பாலவாயில் குடிசைப்பகுதி பாடியநல்லூர் அங்களபரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தின் சார்பாக நிலைய அலுவலர் த.ஜெயசந்திரன் தலைமையில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு சமையல் அறை தீ விபத்து மற்றும் எல்பிஜி தீ விபத்து பற்றிய செயல்முறை விளக்கமும் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டனர். அப்பொழுது பொதுமக்களுக்கு தீ விபத்து பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகித்து தீ விழிப்புணர்வுபிரச்சாரம் மேற்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu