இன்று தேர்வு தொடக்கம்: திருவள்ளூரில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

இன்று தேர்வு தொடக்கம்: திருவள்ளூரில் பிளஸ்-2  மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

பிருந்தா.

இன்று தேர்வு தொடங்கிய நிலையல் திருவள்ளூரில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் லிங்கம் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் டெய்லராக வேலை செய்து வருகிறார்.இவரது மூத்த மகள் ரூபி என்கிற பிருந்தா சென்னை மாதவரத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.இன்று 12 வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில் பள்ளியில் கல்வி கட்டணம் கட்டவில்லை என்று கேட்டதாக கூறப்படுகிறது

இதையடுத்து தனது தந்தையிடம் மாணவி கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். தந்தை இரண்டு நாட்கள் கழித்து கட்டணத்தை செலுத்துவதாக கூறி வேலைக்கு சென்று விட்டார்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கல்வி கட்டணம் செலுத்தவில்லை என மன உளைச்சலில் இருந்த மாணவி நேற்று வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த புழல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!