மாதவரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு உற்சாகம் வரவேற்பு

மாதவரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு உற்சாகம் வரவேற்பு
X

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்து மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு தலைமையில் ஆரவாரமான வரவேற்பு நடைபெற்றது.

மாதவரம் அடுத்த கதிர்வேடு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்து மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு தலைமையில் ஆரவாரமான வரவேற்பு நடைபெற்றது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் போட்டியிடுவது தொடர்ந்து திருவள்ளூர் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாதவரம் அடுத்த புழல் கதிர்வேடு பகுதியில் பொது மக்களிடையே வாக்கு சேகரிக்க சென்ற போது அப்பகுதியில் உள்ள புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் விதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். அப்பொழுது 31, வது வார்டு காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு அவர்கள் எம்பி பதவி வெற்றி பெற்றதை உறுதி செய்யும் விதமாக எம் பி சசிகாந்த் செந்தில், என்ற எழுதப்பட்ட பெயர் பலகையை வழங்கினார். இந்நிகழ்வில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்,

காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் பாபு,மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சிகள் என அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!