போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செங்குன்றம் அருகே தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி குமரன்நகரில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி குமரன் நகரில் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு கூட்டமைப்பின் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக செங்குன்றம் எம்-4காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் கலந்துகொண்டு தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி குமரன் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக பணியான நூறுநாள் வேலையில் பணிபுரியும் பணியாளர்களிடம் பேசிய அவர் தாங்கள் வீடுகளில் அல்லது அக்கம், பக்கத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள இதுபோன்று போதை பொருள் பழக்கம் இருந்தால் அதனை எவ்வாறு தவிர்த்துக் கொள்ள அவர்களுக்கு அதனால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் பற்றி எடுத்துக் கூறுவது நம்மளுடைய கடமை என்பதும், நமக்கு எதற்கு என்று நினைத்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாது.
ஒவ்வொரு சமூக பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டால் அது அனைவருக்கும் நன்மையாகும் என்று அதேபோல் தாங்கள் பகுதியில் போதை பொருள் நடமாட்டமோ, விற்பனையோ நடைபெற்றால் அருகில் உளள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தீவீர விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் காவல் துறை பதிவாளர் ராஜ்குமார், சமூக ஆர்வலர்கள் சதீஷ்குமார், விஜி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.அருகே தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி குமரன்நகரில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu