புள்ளிலையன் ஊராட்சியில் திமுக தெருமுனை கூட்டம்
புள்ளிலையன் ஊராட்சியில் திமுக தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சியில் சென்னை வடகிழக்கு மாவட்டம் புழல் ஒன்றியம் திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வரின் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்விரமேஷ், மாவட்ட பிரிதிநிதி ரமேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் மற்றும் தலைமை கழக பேச்சாளர் கடையநல்லூர் இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ்நாடு முதல்வர் இரண்டு ஆண்டுகளில் திராவிட மாடலாக பொதுமக்களுக்கு செய்துவரும் பணிகளை குறித்து புள்ளிலையன் ஊராட்சி வாழ் மக்களிடையே விளக்கி சிறப்புரையாற்றினர்.
இதில் அவைத்தலைவர் செல்வமணி, புழல் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணிதிருமால், துணை பெருந்தலைவர் சாந்திபாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர் ராஜேஷ்வரிஎத்திராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாதவன், வார்டு உறுப்பினர்கள் சாக்கிரட்டீஸ், பிரேமலதா மற்றும் வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், இளைஞரணி நிர்வாகிகள் இனியன், யுவராஜ், டேவிட், செல்வகுமார் கிளை கழக செயலாளர்கள் மனோகரன், டில்லி, தினேஷ், சதீஷ், இராமச்சந்திரன், வெங்கடேசன், சரவணன் உள்ளிட்ட அனைத்துநிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu