புழல் சிறையில் விஜயகீதம் அறக்கட்டளையினர் மரக்கன்று வழங்கல்

புழல் சிறையில் விஜயகீதம் அறக்கட்டளையினர் மரக்கன்று வழங்கல்
X

புழல் மத்திய சிறையில் விஜய் கீதம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று வழங்கி பெண் கைதிகளுக்கு கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

சென்னை புழல் சிறையில் விஜயகீதம் அறக்கட்டளையினர் சார்பில் மரக்கன்று வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் விஜய்கீதம் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் கீதா ஓம் சரவணன் பல்வேறு நலத் திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை புழல் பகுதியில் உள்ள மத்திய சிறைச் சாலையில் மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் பெண் கைதிகளுக்கு விஜய கீதம் அறக்கட்டளை சார்பில் பல்வேறு கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர்.

அதன்படி ஆடை வடிவமைப்பு தொடர்பான பயிற்சியினை பெண் கைதிகளுக்கு கற்றுக் கொடுத்தனர். மேலும் கூடை பின்னுதல் குறித்து பயிற்சியினை விரைவில் கற்றுத் தருவதாக தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!