செங்குன்றம் அருகே வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

செங்குன்றம் அருகே வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா
X

ஸ்ரீதேவி செங்குன்றம் பராசக்தி வீரம்மாகாளி அம்மன் 

செங்குன்றம் அருகே வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

செங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி செங்குன்றம் பராசக்தி வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் 45-ம் ஆண்டு தீமிதி திருவிழா ஆலய தர்மகர்த்தா அருள்வாக்கு தேவிசித்தர் ராஜாசுவாமிகள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கணபதி பூஜையுடன் கொடியேற்றுதல், காப்புக்கட்டுதல், பால்குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், கரகம் எடுத்தல், அம்மனுக்கு 1008 குங்குமம் அபிஷேகம், மங்கள சண்டி ஹோமம், பூச்சோரல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் விரதம் இருந்த சுமார் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீகுண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர். இதனைத்தொடர்ந்து அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலா நடைபெற்றது.

இத்திருவிழாவை முன்னிட்டு ஆலயம் சார்பில் 15 நாட்களாக தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கினர். அத்துடன் ஆலய விழாகுழு நிர்வாகிகள் கோபி, குமரேசன், ரவிச்சந்திரன், கபாலி, பாபு, ராஜேந்திரன், பிரேம்குமார், ஹரிராம், அன்பு, பொன்னுசாமி, கிருஷ்ணன், சுரேஷ், ஜெகன், மனோகர், பரமசிவம், முனுசாமி, கமல், குப்புசாமி, ராஜேஷ், தர்மலிங்கம் மற்றும் அனைத்துநிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பேரூராட்சி நிர்வாகிகள் இத்திருவிழாவை ஒருங்கிணைத்தனர்.

இதில் சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, சுமங்கலி பூஜை நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!