செங்குன்றத்தில் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

செங்குன்றத்தில் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
X

செங்குன்றத்தில் நடைபெற்ற பூபந்து, கிரிக்கெட் விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்குன்றத்தில் பூபந்து, கிரிக்கெட் விளையாட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பூபந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி 4-வது வார்டு காமராஜர் நகர் நண்பர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் மதன் அறக்கட்டளை சார்பில், செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி 4-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக்கோட்டீஸ்வரன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் சுற்றுவட்டாரத்திலிருந்து சுமார் 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர்.பின்னர் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக செங்குன்றம் சரக சட்டஒழுங்கு காவல் ஆய்வாளர் சாய்கணேஷ் கலந்துகொண்டு பூபந்து மற்றும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் கோப்பையை வழங்கி வாழ்த்தினர்.

இதில் சமூக ஆர்வலர்கள் நாகூர்அணிபா, மதன் உள்ளிட்ட காமராஜர் நகர் நண்பர்கள் குழுவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture