சென்னை விமான நிலையத்திற்கு 'நுகர்வோரின் குரல்' அங்கீகாரம்

சென்னை விமான நிலையத்திற்கு நுகர்வோரின் குரல் அங்கீகாரம்
X

சென்னை விமான நிலையம்.

சென்னை விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சிலின் 'நுகர்வோரின் குரல்' எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சிலின் 'நுகர்வோரின் குரல்' எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்த அங்கீகாரம் சென்னை விமான நிலையத்தில் அதன் வாடிக்கையாளரான பயணிகள் நலனில் அளித்து வரும் முன்னுரிமைக்கு கிடைத்த சான்றாக கருதப்படுவதுடன், தொடர்ந்து அந்தப் பணியை மேற்கொள்ளவும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பயணியரின் குரலுக்கு செவிமடுத்து விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நற்சான்றிதழ் அளிப்பதாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையிலும், பயணிகள் அளித்துவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை விமான நிலைய நிர்வாகம் தொடர்ந்து பயணிகள் நலனில் கவனம் செலுத்தும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்