தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி

தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி
X

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சாலை அமைக்கப்பட்டது. 

தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர் கோரிக்கையை ஏற்று உடனடியாக செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி 7-வது வார்டு வ.ஊ.சி தெருவில் வசிக்கும் மக்கள் சாலை அமைக்க கோரிக்கை வைத்தனர். 7-வது வார்டு உறுப்பினர் கீதாவிஜி மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன் சீரிய முயற்சியில் மக்கள் நலன் கருதி புழல் ஒன்றிய குழு சேர்மன் தங்கமணிதிருமால், துணை சேர்மன் சாந்திபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு பூமி பூஜைகள் செய்து பின்னர் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு சிதிலம் அடைந்த சாலையை ரூ.10.70 லட்சம் மதிப்புள்ள புதிய தார் சாலையாக அமைத்து தரப்பட்டது. இதனைத்தொடர்ந்து 7-வது வார்டு வ.ஊ.சி.தெரு பகுதிவாழ் மக்கள் பயன்பாட்டிற்கு புதிய தார் சாலை அமைத்து தந்த ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன், மற்றும் வார்டு உறுப்பினர் கீதாவிஜி ஆகியோரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி நன்றி தெறிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!