செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி துவக்கம்

செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி துவக்கம்
X

செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

Pond Construction - செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

Pond Construction -திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மாதவரம் தொகுதி புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில் புள்ளிலையன் ஊராட்சி பாயசம்பாக்கம் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் புதிய குளம் உருவாக்க திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜைகள் செய்து பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பணிகள் துவங்கப்பட்டது.

இதில் புழல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதநாயகம், மம்மு, உதவி செயற் பொறியாளர் சிவசங்கரி, உதவி பொறியாளர் ராணி, பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன், சமூக சேவகர் ரமேஷ் மற்றும் சரவணன், கதிரவன், கலைமணி, ஜெயக்கொடி, யோகேஷ், ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai as the future