அலமாதி ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி சிறப்பு பூஜை

அலமாதி ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி  சிறப்பு பூஜை
X

அலமாதி ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மன். 

அலமாதி ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் உலகமக்கள் நன்மை வேண்டி சித்திரை பௌர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் ஆலயம் உள்ளது. இங்கு, உலக மக்களின் நன்மைக்காக, சித்திரை பௌர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு, ஆலய ஸ்தாபகர் சக்திசரவணன் தலைமையில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளையம்மா, பொம்மியம்மா மதுரைவீரன் சுவாமிகளுக்கு படையல் சிறப்பு பூஜையுடன் தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஆலய நிர்வாகிகள் சசிகலா, கண்ணன், சுரேஷ், தினேஷ்குமார், பொருமாள், வெங்கடேஷ், முத்து, அஜித், அழகேஷ், முரளிதாஸ், காலி, கோகுலகிருஷ்ணன், சுரேஷ், தர்மன் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் சுமார் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி