முதல்வர் பிறந்தநாள் விழா: விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் ஒரு நாள் கால்பந்து போட்டி

முதல்வர் பிறந்தநாள் விழா: விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் ஒரு நாள் கால்பந்து போட்டி
X

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக ரூ.40000 மும், இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.30000 மும் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ஒரு நாள் கால் பந்தாட்ட போட்டி புழல் அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன், துணைத் தலைவர் கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினரான மாதவர் சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கால் பந்தாட்ட போட்டியை துவக்கி வைத்தார்.

இதில் திமுக கழக நிர்வாகிகள் செல்வமணி, ராஜேஸ்வரி எத்திராஜ், பாஸ்கர், ரமேஷ் அற்புதராஜ் முருகன் சென்றம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராமு கவுன்சிலர்கள் தெய்வானை கபிலன், சிவகுமார், கமலக்கண்ணன், முரளி, முருகன், ஞானசேகர், எழில், பரிமளச் செல்வம், முருகன், அருண்மொழிவர்மன், அண்ணாதுரை, எழிலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை டாக்டர் அம்பேத்கர் கால்பந்தாட்ட குழு செய்திருந்தது. வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக ரூ.40000மும், இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.30000மும், வெற்றி பெறும் அணி வீரர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future