செங்குன்றத்தில் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கல்

செங்குன்றத்தில் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கல்
X

படம்

செங்குன்றத்தில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.

செங்குன்றத்தில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் எம்.நாகூர் அனீஃபா தலைமையில் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.முகம்மது அபுபக்கர், உடனடி முன்னாள் தலைவர் ஏ.கே. முகம்மது யூசுப் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

லயன்ஸ் சங்க ஆளுநர்கள் ரவிச்சந்திரன், மணிசேகர் மற்றும் நரசிம்மன் ஆகியோர் 10 ரூபாய் சிக்கன் பிரியாணியை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மாவட்டச் செயலாளர் எழில்வளவன், பொருளாளர் சுதாகர், நிதி ஒருங்கிணைப்பாளர் சி.ராஜேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.டி. தனராஜு, ஜிஎல்டி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, வட்டாரத் தலைவர் பொன்னையன், மாவட்டத் தலைவர்கள் இரா.ஏ.பாபு, ஆர்.முனுசாமி, வடிவேலன், என்.சந்திரசேகர், ஆர்.செல்வக்குமார் செங்குன்றம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சங்கர், ராஜேஷ் கண்ணா, நந்தகுமார், பி.அன்பு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!