கழிவுநீர் கட்டமைப்பு பணிகள்: சுதர்சனம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

கழிவுநீர் கட்டமைப்பு பணிகள்: சுதர்சனம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
X

கழிவுநீர் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை தொடங்கிவத்த மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம்.

கழிவு நீர் கட்டமைப்பு பணிகளை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் துவக்கிவைத்தார்.

சென்னை குடிநீர் வாரியம் பகுதி 2 இல் பருவமழைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நெருக்கம் மிகுதியாக உள்ள பகுதிகளில் தெருக்களில் கழிவுநீர் கட்டமைப்புகளை முழுமையாக தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிகள் நேற்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதன் அடிப்படையில் மணலி பகுதியில் உள்ள இடங்களில் பெருமளவு கழிவுநீர் மற்றும் குழாய்கள் மற்றும் பராமரிப்பு தொட்டிகளில் உள்ள கசடுகள் அகற்றப்படும் பணியினை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் . சுதர்சனம் 19 இல் உள்ள மாத்தூர் 2வது மெயின் ரோட்டில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை குடிநீர் வாரிய பகுதி 2 பொறியாளர் பன்னீர்செல்வம் துணை பகுதி பொறியாளர்கள் .சரவணன், விசுவநாதன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!