செங்குன்றம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

செங்குன்றம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

செங்குன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

செங்குன்றம் அருகே கோனி மேடு பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பம்மதுகுளம் ஊராட்சி கோணிமேடு பகுதியில் பாமக கொடிஏற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி கோணிமேடு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசின் 86-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கொடிஏற்றுதல் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ்வரிமுனுசாமி ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரகாசம் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.சபாபதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அம்பத்தூர் நகர்மன்ற தலைவர் கே.என்.சேகர் கலந்துகொண்டு சுமார் 86 அடி கொண்ட கொடிகம்பத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் ஆவடி ஆனந்தகிருஷ்ணன், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் சகாதேவன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்உமாபதி, முன்னாள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஞானபிரகாசம், மாவட்ட துணை செயலாளர் லட்சுமிநாராயணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தன், திருவொற்றியூர் பூபதி, வில்லிவாக்கம் ஒன்றிய தலைவர் குமார், பொருலாளர் பவானிபன்னீர்செல்வம், மாதவரம் கிழக்கு பகுதி செயலாளர் பாஸ்கர், புழல் ஒன்றிய செயலாளர் துளசிங்கம், சோழவரம் ஒன்றிய செயலாளர் பழனி, செங்குன்றம் நகர தலைவர் குணா, ஆவடி பாண்டுரங்கன்,முன்னாள் பம்மதுகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாஏழுமலை, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏழுமலை மற்றும் குருஏழுமலை, சுரேஷ், மோகன்ராஜ், சுபாஷ், ஞானமூர்த்தி, கவிஞர், ,பிரகளநாதன் உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க அனைத்துநிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மூத்தமுன்னோடிகள், இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சினை சிறப்பித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!