செங்குன்றம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

செங்குன்றம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

செங்குன்றம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்குன்றம் அருகே நடந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கப்பட்டது.

செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் தி.மு.க.இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் ஆலோசனைபடி நடைபெற்றது.

விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிசரவணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு புழல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணன் தலைமை தாங்கி கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி பின்னர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அறுசுவை உணவு பிரியாணியை வழங்கினார். இதில் அவைத்தலைவர் செல்வமணி, ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் சாந்திபாஸ்கர், மாவட்ட பிரிதிநிதி ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் பாரதி, காமராஜ், தங்கராஜ், முருகன், கிளை செயலாளர்கள் பரிமளசெல்வம், கோவிந்தராஜ், சதீஷ், அருண், நாகராஜ், டில்லியார், சீனு, தனஞ்சயன் வார்டு உறுப்பினர்கள் சத்தியசீலன், ரதிசீனிவாசன், மாரி, அருணாதேவிசீனு, தர்மிரவி, நிலவழகிஇனியன், ஆனந்திநாகராஜன் உள்ளிட்ட எழிலன், அஜித்குமார் உட்பட அனைத்துநிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
is ai the future of computer science