கருணாநிதி பிறந்த நாள் விழா; மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
புள்ளிலையன் ஊராட்சியில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புழல் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம், புள்ளிலையன் ஊராட்சி அண்ணா சிலை அருகே சென்னை வடகிழக்கு மாவட்டம் புழல் ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சி திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் விழா நடத்தப்பட்டது.
இதை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை வடகிழக்கு மாவட்ட பிரிதிநிதி ரமேஷ், புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்விரமேஷ் ஆகியோர் ஏற்பாட்டில், சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவிக சட்டமன்ற உறுப்பினரும் கழக துணை அமைப்பு செயலாளருமான தாயகம்கவி, தலைமை கழக பேச்சாளர் தேவபாலன் ஆகியோர் கலந்துகொண்டு மு.கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினர்.
பின்னர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு புத்தாடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் புழல் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணிதிருமால், கிளை செயலாளர்கள் டில்லி, சதீஷ், ராமசந்திரன், ஜெனார்த்தனன், வெங்கடேசன், மனோகரன், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷாகல்விநாதன், மாவட்ட பிரிதிநிதிகள் அற்புதராஜ்,ஜெகதீசன் மற்றும் ஸ்டாலின், திராவிடமணி, இலக்கியன் உள்ளிட்ட திமுக அனைத்துநிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் கிளை செயலாளர் தினேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu