செங்குன்றத்தில் பாமக சமூகநீதி பேரைவை வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம்

செங்குன்றத்தில் பாமக சமூகநீதி பேரைவை வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம்
X

செங்குன்றத்தில் பாமக சமூகநீதி பேரைவை வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்குன்றத்தில் பாமக சமூகநீதி பேரைவை வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாமக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு, மாதவரம் மற்றும் திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவைக்கு புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து நியமனம் செய்யும் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

செங்குன்றம் நகர செயலாளர் ஜெய்கணேஷ் அனைவரையும் வரவேற்றார். வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவையின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் கே.சரவணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் வழக்கறிஞர் வசந்தகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவையின் மாநில தலைவர் வழக்கறிஞர் கே.பாலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம் மற்றும் திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை புதிய பொறுப்பாளர்களாக மாவட்ட தலைவர்- வழக்கறிஞர் .ர.வசந்தகுமாரி, மாவட்ட செயலாளர்-வழக்கறிஞர் .ச.ரூபன்குமார்(எ) சரவணரூபன், மாவட்ட இளம் வழக்கறிஞர் அணி செயலாளர்- வழக்கறிஞர் .டி.வினேத்குமார்,மாவட்ட மகளிரணி செயலாளர்வழக்கறிஞர்.வெ.கலையரசி, மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் .கோ.சூர்யபிரகாக்ஷ்,மாவட்ட துணை தலைவர் மே.நீதிஸ்குமார்,மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் .மு.துளசிங்கம்,மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் கே.மூர்த்தி, மாவட்ட இணையதள செயலாளர் மு.விக்னேக்ஷ்வரன்,மாதவரம் நீதிமன்ற தலைவர் வழக்கறிஞர் எஸ்.டில்லிமோகன்,மாதவரம் நீதிமன்ற செயலாளர் வழக்கறிஞர் ச.லோகநாதன்,மாதவரம் நீதிமன்ற அமைப்பாளர் வழக்கறிஞர் டி.பிரதீப், திருவொற்றியூர் நீதிமன்ற தலைவர் வழக்கறிஞர் பா.ஹேமநாத், திருவொற்றியூர் நீதிமன்ற செயலாளர் வழக்கறிஞர் பா.தினேஷ்பாபு ஆகியோர்களுக்கு சமூகநீதி பேரவை வழக்கறிஞர்களுக்கான நியமன சான்றிதழை வழங்கி வாழ்த்தினர்.

மேலும் புழல் ஒன்றிய பாமக பொருலாளர் சுமதிபாரத்குமார்-க்கு நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது.இதில் மாவட்ட துணை செயலாளர் லட்சுமிநாராயணன், ஊடக பிரிவு விக்னேஷ், பழனி, தங்கவேல், கனகராஜ், சுமதிபாரத்குமார், ரகு, சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story