செங்குன்றம் அருகே தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

செங்குன்றம் அருகே  தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
X
செங்குன்றம் அருகே நாவாரி குப்பம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
செங்குன்றம் அருகே நாரவாரி குப்பம் பேரூராட்சியில் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் தலைமையில் நடை பெற்றது.நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் ஆணையர் இரா.செல்வராஜ் கலந்துகொண்டு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நடவடிக்கையாக செங்குன்றம் அண்ணா பேரூந்து நிலையத்தில் தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டு பின்னர் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வைக்கு துவக்கி வைத்தனர்.

இதணைத்தொடர்ந்து பேரூராட்சியில் உள்ள 14, -வது வார்டு அண்ணா தெரு, 15 -வது வார்டு மேட்டுத் தெருவில் வீடு,வீடாகச் சென்று குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்குதல், குப்பைகளை வெளியே கொட்டுவதை தவிர்த்தல் மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை தவிர்த்தல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிக கடை வியாபாரிகளுக்கு எடுத்துரைத்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தனர்.

இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ச.கண்ணன், துணைத்தலைவர் ஆர்.இ.ஆர்.விப்ரநாராயணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர் ம.பாஸ்கரன் சுகாதார ஆய்வாளர் மதியழகன், வியாபாரி நலச்சங்க தலைவர், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!