செங்குன்றத்தில் நெல், அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

செங்குன்றத்தில் நெல், அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
X

செங்குன்றத்தில்  நெல் அரிசி வியாபாரிகளுக்கு செரிவூட்டப்பட்டஅரிசி பற்றிய பயிற்சி முகாம் நடந்தது.

செங்குன்றத்தில் நெல், அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக பொது விநியோகத் திட்டத்தில் செரிவூட்டப்பட்ட அரிசி பற்றிய விழிப்புணர்வு முகாம் செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரி சங்க திருமண மண்டபத்தில் உணவு பாதுகாப்பு துறை திருவள்ளூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது.

புழல் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ .சிவசங்கரன் சோழவரம் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா முஹம்மது ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவள்ளூர் மண்டல மேலாளர் ஜே.சேகர், துணை மண்டல மேலாளர் டி.முனுசாமி, தர கட்டுப்பாடு துணை மேலாளர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செரிவூட்டப்பட்ட அரிசி பயிற்சியாளர் ஜெகதீஸ்வரி நெல் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பயிற்சி அளித்த போது,பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கும் வகையில் உணவின் தரத்தை மேம்படுத்த, அத்தியாவசிய சத்துக்களுடன் அரிசியை செரிவூட்டுவதே செரிவூட்டப்பட்ட அரிசியாகும். வழக்கமான அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றார்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட செரிவூட்டப்பட்ட அரிசியை 12 மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். செரிவூட்டப்பட்ட அரிசியில், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், துத்தநாகம் போன்ற சத்துக்களுடன், வைட்டபின் ஏ, மற்றும் பி1, பி2, பி6 உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் இருக்கும்.

இதில் செங்குன்றம் நெல் அரிசி ஆலை மொத்த உரிமையாளர்கள் சங்க தலைவர் டி.கோபி, செயலாளர் ஏ.லோகநாதன், பொருளாளர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story