புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்

புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்
X

புதிய மின்மாற்றியை இயக்கி வைத்த சுதர்சனம் எம்எல்ஏ.

மாதவரம் அருகே பொத்தூர் ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றிகளை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ரிப்பன் வெட்டி இயக்கி வைத்தார்.

மாதவரம் அருகே பொத்தூர் ஊராட்சியில் புதிய மின்மாற்றிகளை ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொத்தூர் ஊராட்சி விஜயலட்சுமி நகர், பொக்கிஷம் நகர் ஆகிய இரு இடங்களில் புதிய மின்மாற்றிகளின் இயக்க விழா வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் மோரை மு.தயாளன் தலைமையில் நடைபெற்றது.

வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளரும் ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளருமான பொத்தூர் மாரி அனைவரையும் வரவேற்றார். மின்வாரிய செயற்பொறியாளர் சௌந்தரராஜன்,உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்சன்,உதவி பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும், மின்வாரிய பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதில் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராமதாஸ், ஒன்றிய கவுன்சிலர் குணா தயாநிதி, தேவிமாரி, மாவட்ட பிரதிநிதியும் வெள்ளானூர் ஊராட்சி மன்றத் தலைவருமான பிரபாகரன், இராமகிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இளமாறன், ஒன்றிய மாணவரணி அந்தோணி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்