சென்னை மாநகராட்சியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னை மாநகராட்சியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
போதை பொருள் பழக்கம் என்பது உலகளாவிய பிரச்சனையாக இருந்து வருகிறது, போதை பொருள் கடத்தல் தொடர்பாக பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என புழலில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையை அடுத்த புழலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று போதை பொருள் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து மாணவர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்து கொண்டார்.
தொடர்ந்து பலூன்களை பறக்க விட்டும், போதை பொருள் பயன்பாடு தவிர்ப்பதை குறித்து கையெழுத்திட்டும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை ஒதுக்காமல் அரவணைத்து மீட்டெடுக்க வேண்டும் எனவும், மனரீதியாக சோர்வடைந்து பாதிக்காமல் இருக்க அவர்களுக்கு உளவியல் ரீதியாக துணை புரிய வேண்டும் என தெரிவித்தார். சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும், போதை பொருள் பழக்கம் என்பது உலகளாவிய பிரச்சனையாக இருந்து வருகிறது என்றும், போதை பொருள் கடத்தல் தொடர்பாக பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு முழுவதும் 500 போதை மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் உள்ள 11526 கி.மீ.சாலைகளில் 2624கிமீ தொலைவிற்கான மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன எனவும், கடந்த 2 ஆண்டுகளில் 800 கிமீ மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளதாகவும், 232 சிறிய வடிகால் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு சவாலாக இருந்த மடிப்பாக்கம், குபேரன் நகர், ராம் நகர், முகலிவாக்கம், சபரி தெரு, மணலி புதுநகர் ஆகிய இடங்களில் தற்காலிக பணிகள் முடிந்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் எஞ்சிய 5% பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் எந்த ஒரு மறுவாழ்வு மையத்திலும் உயிரிழப்பு என்பது ஏற்பட கூடாது எனவும் மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை பெறுவோரை அடித்தல், கட்டி வைத்தல் என துன்புறுத்த கூடாது எனவும் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu