மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பு : தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு குழு

மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பு : தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு குழு
X

பைல் படம்

மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

காடுகள், புலிகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகளுக்கு நோய்த்தொற்றுகளைத் தடு்க்க, ,பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க, தமிழக அரசு, குழுவை அமைத்துள்ளது.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

வனப்பாதுகாவலர்,முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், சிறப்பு செயலாளர் (வனம்), சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர், மேம்படுத்தப்பட்ட வன உயிரின பாதுகாப்பு நிறுவனம்

சுந்தரராஜூ (ஓய்வு), முன்னாள் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் மற்றும் தியடோர் பாஸ்கரன், வனவிலங்கு பாதுகாவலர் ஆகியோர்களை கொண்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட மாநில அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு நோயின் பரவலைக் கண்காணித்தல், தடுப்பூசி வழங்குதல் மற்றும் தொடர்புடைய துறைகளின் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்து தொடர் அறிக்கையினைச் தமிழக அரசுக்கு சமர்பிக்க இருக்கிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!