சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி உடல் நல குறைவால் உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி உடல் நல குறைவால்  உயிரிழப்பு
X
சென்னை புழல் சிறை விசாரணை கைதி உடல்நல குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

புழல் சிறை விசாரணை கைதி உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம். சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கமலேஷ், அரும்பாக்கம் காவல் நிலைய அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 29ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கமலேஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணை கைதிக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டி ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது