தெருமுனை பிரச்சார கூட்டத்தில் வி.சி.க.வில் இணைந்த மாற்று கட்சியினர்

தெருமுனை பிரச்சார கூட்டத்தில் வி.சி.க.வில் இணைந்த மாற்று கட்சியினர்
X

சென்னை மாதவரம் அருகே நடந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மாற்று கட்சியினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

தெருமுனை பிரச்சார கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மாதவரம் அருகே பன்னீர்வாக்கத்தில் நடைபெற்ற வி.சி.க. தெருமுனை கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50.க்கும் மேற்பட்டோர் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சோழவரம் தெற்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆங்காடு ஊராட்சி பன்னீர்வாக்கம் கிராமத்தில் கொடியேற்றுதல் மற்றும் தெருமுனை கூட்டம் நிகழ்ச்சி சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் காந்தி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் கஜேந்திரன் வரவேற்றார்.மாதவரம் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தினகரன், ஒன்றிய பொருளாளர் மதன், ஒன்றிய துணை செயலாளர் மோகன்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முல்லை நீலமேகம் கலந்துகொண்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் பன்னீர்வாக்கம் பகுதிகளில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாட்டு கொள்கை விளக்கி சிறப்புரையாற்றினர். இதனைதொடர்ந்து மாற்று கட்சியிலிருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் தங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

மேலும் கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இதில் சமூக ஊடகமையம் அமைப்பாளர் பார்த்திபன், சோழவரம் இளைஞரணி அமைப்பாளர் கோட்டை குணா, புயல்பிரசாந்த், சர்மிளாதேவி செந்தில் மற்றும் அம்பேத்தர்மா, பாலாஜி, வினோத்குமார், பிரகாஷ், சதீஷ், வேலு, அசோக்குமார், ராஜசேகர், குமரேசன், அருண்குமார், தமிழரசன், ஞானசேகர், அஜித், வினோத், பவானி,தமிழரசி, நர்மதா, ஜீவா உள்ளிட்ட அனைத்துநிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி