நாரவாரிகுப்பம் பேரூராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

நாரவாரிகுப்பம் பேரூராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
X

நாரவாரிகுப்பம் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.

நாரவாரிகுப்பம் பேரூராட்சிக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) தேர்வுநிலை பேரூராட்சி மாதாந்திர ஆலோசனை கூட்டம் பேரூராட்சித் தலைவர் தமிழரசி குமார் தலைமையில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் டாக்டர் அம்பேத்கர் தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் சமையல் அறை கட்டும் பணி (33 சதவீதம்) பொதுமக்கள் பங்களிப்புத் தொகை ரூ. 2 லட்சம் மற்றும் அரசு பங்களிப்புத் தொகை ரூ. 4 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் செய்ய மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளி கோரி பணிகள் மேற்கொள்ள மன்றத்தின் பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வைக்கப்பட்டது.

மேலும், 16 ஆவது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் வார்டுக்குட்பட்ட பிடபிள்யூ தெருவில் ரூ. 20 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கு மன்றத்தின் ஒப்புதலுக்கு மன்றத்தின் பார்வைக்கும் வைக்கப்பட்டது. 2 ஆவது வார்டு கவுன்சிலர் லதா கணேசன் வார்டுக்குட்பட்ட விக்கிரவாண்டி கோவிந்தசாமி தெருவில் ரூ. 4.50 லட்சம் செலவில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டி வைத்து குடிநீர் பைப் லைன் விஸ்தரிப்பு செய்வதற்கும் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

மேலும், செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ. 20 லட்சம் செலவில் கூடுதல் கழிப்பறைகள் கட்டி புதுப்பிக்கும் பணிக்கு ஒப்புதலும் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

கூட்டத்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள் பபிதா பால்ராஜ், லதா கணேசன், சகாதேவன், கார்த்திக் கோட்டீஸ்வரன், தெய்வானை கபிலன், லீலாவதி சாந்தகுமார், வினோதினி பாலாஜி, கோமதி பாஸ்கர், ஸ்ரீதேவி தேவராஜ், மோகன் என்ற இலக்கியன், கோதண்டராமன், தூய்மை ஆய்வாளர் மதியழகன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரூராட்சி கூட்டம் தொடங்கியதும் 7 ஆவது வார்டு சுயேட்சை கவுன்சிலர் ரமேஷ், அதிமுகவைச் சேர்ந்த 9 ஆவது வார்டு கவுன்சிலர் அமுதா ஆசைத்தம்பி, 16 ஆவது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!