கோ-கோ இன்டர் ஜோன் போட்டியில் ஆவிச்சி கலை அறிவியல் கல்லூரி சாம்பியன்

கோ-கோ இன்டர் ஜோன் போட்டியில் ஆவிச்சி கலை  அறிவியல் கல்லூரி சாம்பியன்
X

கோ கோ இன்டர் ஜோன் போட்டியில் வெற்றி பெற்ற ஆவிச்சி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்.

சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற கோ கோ இன்டர் ஜோன் போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை வேளச்சேரி குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஆண்களுக்கான கோ -கோ இன்டர் ஜோன் போட்டில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

மெட்ராஸ் யுனிவர்சிட்டி கல்லூரி இன்டர் ஜோன் லீக் போட்டியில் ஏ ஜோன் அளவில் லயோலா கல்லூரி, ஏ ஜோன் ஒருங்கிணைந்த குழு, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பி ஜோன் ஒருங்கிணைந்த குழு பங்கேற்ற கோ கோ போட்டி நடைபெற்றது.மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் லயோலா கல்லூரி 43 புள்ளிகளும் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 47 புள்ளிகளும் பெற்றது. ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

அது மட்டுமின்றி சண்டிகரில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான ஜூனியர் கோ கோ போட்டிக்காக ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எஸ்.சசிதரன் பி.காம் ஜெனரல் மற்றும் ஜி.சுபாஷ் பி.காம் (ஏ.எஃப்) ஆகிய இருவரும் தமிழ் நாடு அணிக்காக தேர்வாகி உள்ளனர்.

இதேபோல் கடந்த வருடம் புனேவில் நடைபெற்ற அல்டிமேட் கோ.கோ லீக் தொடரில் ஆவிச்சி கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன் பி.ஜெய்பிரகாஷ், பி.காம் ஜெனரல் சென்னை குயிக் கன் அணிக்காக விளையாடினார். என்பது குறிப்பிடத்தக்கது.மகத்தான வெற்றிபெற்ற அணி வீரர்களையும் பயிற்சியாளர் செந்தில்குமாரையும் உடற்கல்வி இயக்குனர் சுகுமாரனையும் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil