புழல் அருகே நடந்த வாகன சோதனையில் மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர் கைது

புழல் அருகே நடந்த வாகன சோதனையில் மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்பாக  கைது செய்யப்பட்ட முகமது யூசுப்.

புழல் அருகே நடந்த வாகன சோதனையில் இருசக்கர வாகனம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

புழல் அருகே வாகன சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடனிடம் இருந்த நான்கு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆர் ஒன் 5 என்ற இருசக்கர வாகனம் திருட்டு போய்விட்டதாக கடந்த மாதம் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து புழல் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று மதியம் கதிர்வேடு மேம்பாலம் அருகே குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்லதுரை, சீனிவாசன், ஹேமநாதன் ஆகியோர் அவ்வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே வந்த நபரை சோதனை செய்ய முற்பட்டபோது அவர் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார்.

அவரை துரத்திப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஓட்டி வந்த வாகனம் திருட்டு போன கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் பிடிபட்ட நபரின் பெயர் முகமதுயூசுப் எனவும் அவர் இது போல் ஆர் கே நகர் ,ஆவடி ஆகிய சுற்றுவட்டாரங்களில் இருசக்கர வாகனத்தை திருடிய ஸ்பிலன்டர்,ஆக்டிவா,டியோ ஆகிய மூன்று மோட்டார் சைக்கிள்களையும் அவர் ஓட்டி வந்த வாகனத்தையும் கைப்பற்றி போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இது குறித்து புழல் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். நான்கு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது பல காவல் நிலையங்களில் இது போல் திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story