சென்னையில் வேலை தேடி வரும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது

சென்னையில் வேலை தேடி வரும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது
X

கைது செய்யப்பட்ட பெண் பவானி.

சென்னை புழலில் வேலை தேடி வந்த பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

புழலில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார். வேலை தேடி வரும் அப்பாவி பெண்களை குறிவைத்து பாலியல் தொழிலை அந்த பெண் நடத்தியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் வேலை தேடி வரும் அப்பாவி பெண்களை குறிவைத்து தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வரும் கும்பல் குறித்து சென்னை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புழல் அடுத்த சூரப்பட்டில் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலை நடத்தி வந்த பவானி ( வயது 38) என்ற பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த இளம் பெண் ஒருவரை காவல்துறையினர் மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் இப்பகுதியில் இது போன்று பாலியல் தொழிலில் செய்யும் கும்பல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இது போன்ற கும்பலை போலீசார் கண்டறிந்து அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து அப்பாவி பெண்களை காக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்களை தான் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கலாச்சாரம் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் தற்போது வேலை தேடி வரும் பெண்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த தொழிலும் போலீசாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
why is ai important to the future