லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாபெரும் இலவச இருதய, கண் பரிசோதனை முகாம்

லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாபெரும் இலவச இருதய, கண் பரிசோதனை முகாம்
X
சென்னை செங்குன்றத்தில் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி லயன்ஸ் சங்கங்கள் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
Free Medical Camp- சென்னை செங்குன்றத்தில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாபெரும் இலவச இருதய, கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Free Medical Camp- டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு சென்னை சோசியல், பாடியநல்லூர், தமிழ்சிங்கம், காவாங்கரை, லோட்டஸ் ஷைன், ஆல்ஃபா நெக்ஸ்ட்ஜென் லயன்ஸ் சங்கங்கள், அப்போலோ மருத்துவமனை, மெல்வின் ஜோன்ஸ் மெமோரியல் இரத்த வங்கி, எம்.என். கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச இருதய பரிசோதனை, கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம், இரத்ததான முகாம், மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை லயன்ஸ் வட்டாரத் தலைவர்கள் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், கா.ஷண்முக சுந்தரம் தலைமையில் சென்னை செங்குன்றம் சமுதாய நலக் கூடத்தில் நடத்தியது.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திருவுருவப் படத்திற்கு லயன்ஸ் சங்க நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் மலர் தூவி மரியாதை செய்தார்.

செங்குன்றம் நகரச் செயலாளர் ஜி.ராஜேந்திரன், புழல் ஒன்றிய துணைச் செயலாளர் ஆர்.டி.குமார், நகர அவைத்தலைவர் ஜெ.ரகுகுமார், துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், டி.அருள்தேவநேசன், எஸ்.முனீஸ்வரி சுகுமார், கே.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்டத் தலைவர்கள் ஜி.பாலாஜி (டயாலிஸ்), இரத்தினவேல் (இரத்ததானம்), பாடியநல்லூர் லயன்ஸ் சங்க செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் வெங்கடேசன், முதல் துணை தலைவர் கோபிநாத், சங்க நிர்வாகி நாகராணி, இணைச் செயலாளர் சிலம்பரசன், நரேந்தர், தமிழ்சிங்கம் லயன்ஸ் சங்கத் தலைவர் சென்னை மு.பீலிக்கான், செயலாளர் எஸ்கே. வரதராஜன், ஜெயலட்சுமி, ராஜ்மலை, சென்னை சோசியல் லயன்ஸ் சங்க செயலாளர் ஏ.கே. முகம்மது யூசுப், பொருளாளர் பயாஸ் உசேன், சேவை திட்ட இயக்குநர் கோகுல் எஸ்.வைதீஸ்வரன், இயக்குநர்கள் ஹனீஃபா, மார்ட்டின், மசூது, காவாங்கரை லயன்ஸ் சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் லிங்கேஷ் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், லயன்ஸ் மாவட்ட முதல் துணை ஆளுநர் வி.பஜேந்திரபாபு, இரண்டாம் துணை ஆளுநர் ஏ.டி. ரவிச்சந்திரன், மாவட்ட இணைப் பொருளாளர் (பொது) எழில்வளவன், செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத் தலைவர் ஆர்.இ.ஆர். விப்ரநாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பபிதா பால்ராஜ், என்.சகாதேவன், எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், அமுதா ஆசைத்தம்பி, பா.கோமதி பாஸ்கர், தே.தேவி தேவராஜ், கு.மோகன் (எ) கா.கு. இலக்கியன், என்எம்டி. இளங்கோவன், கே.கோதண்டராமன், சுகாதார ஆய்வாளர் மதியழ்கன் உள்ளிட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாம்களில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் அப்போலோ மருத்துவமனை சார்பில் உயரம், எடை, இரத்தத்தில் சர்க்கரை அளவு, இ.சி.ஜி, எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட மருத்துவ ஆலோசனையும், எம்.என். கண் மருத்துவமனை சார்பில் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு ஆபரேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மெல்வின் ஜோன்ஸ் இரத்த வங்கி சார்பில் இரத்ததானம் செய்தவர்களை பாராட்டினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்