மாதவரம் அருகே குடிபோதை தகராறில் இளைஞரை கொலை செய்த நண்பன் கைது

மாதவரம் அருகே குடிபோதை தகராறில்  இளைஞரை கொலை செய்த நண்பன் கைது
X

கொலை செய்யப்பட்ட திலீப் குமார் மற்றும் கைது செய்யப்பட்ட ஜெயம்.

மாதவரம் அருகே பார்க்கிங் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொசப்பூர் ரோடு, ப்ளே ஆர்கனைஸ் குடோன் எதிரே உள்ள காலி இடத்தில் அடையாளம் தெரியாத நபர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கொலையான நபர் ஜோசப் திலிப் குமார் (வயது18) த/பெ ஜோதி பிரபு ( லேட் ) எண்.39, 2 வது தெரு, லட்சுமி நகர், பழைய நாப்பாளையம் சென்னை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து கொலை தொடர்பாக பழைய நாப்பாளையம், மணலி இறந்த நபரின் தாயார் பிரியா சித்ரா,என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இறந்த நபரின் நண்பரான ஜெயம் ( வயது 20).3வது தெரு, AS நகர் எண்ணூர். பகுதியில் வசித்து வந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்ட ஜோசப் திலிப் குமாரின் வீட்டிற்கு, அவரது நண்பன் ஜெயம் சென்றபோது தனது வீட்டிற்கு செல்வதற்காக ஜோசப் திலிப் குமாரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு சென்ற ஜெயம் திருமங்கலம் மெட்ரோ ரயில்நிலையம் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சென்றதாகவும், நீண்ட நாட்களான நிலையில் ஜோசப் திலிப் குமார் தனது இரு சக்கர வாகனத்தை வாங்கி தரும்படி ஜெயம் என்பவரிடம் வற்புறுத்தி வந்தததாகவும், அதற்கு ஜெயம் பார்க்கிங் கட்டணம் ரூபாய் 7000 ஆகிவிட்டதாகவும் அதை விரைவில் வாங்கி தருவதாக கூறிய நிலையில், ஜோசப் திலிப் குமார் ஜெயமிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாகனத்தை மீட்டு தரும்படி கடுமையான வார்த்தையால் பேசி திட்டி உள்ளார்.

இந்நிலையில் ஜெயம் ஜோசப் திலீப் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாதவரம் மஞ்சம்பாக்கத்திற்கு வருமாறும் அங்கு வாகனத்தை பற்றி பேசிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

அதன் பேரில் மஞ்சம்பாக்கம் பகுதிக்கு வந்த ஜோசப் திலிப்குமார் மற்றும் ஜெயம் ஆகிய இருவரும் சம்பவ நடந்த இடத்திற்கு வந்து மது அருந்திஉள்ளனர். அப்போது இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஜெயம், ஜோசப் திலிப் குமாரின் பின்பக்க தலையில் பீர் பாட்டிலால் தாக்கி இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோசப் திலிப் குமாரின் வயிற்றில் மூன்று இடங்களில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளி ஜெயம் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளியை போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story