செங்குன்றத்தில் கண் பரிசோதனை முகாம்

செங்குன்றத்தில் கண் பரிசோதனை முகாம்
X

செங்குன்றத்தில் மஸ்ஜிதே ஆயிஷாவில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

செங்குன்றம் மஸ்ஜிதே ஆயிஷாவில் இலவச கண் பரிசோதனை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

செங்குன்றத்தில் மஸ்ஜிதே ஆயிஷாவில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றம் மஸ்ஜிதே ஆயிஷா, சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், தமிழ்சிங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கங்கள், சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து ஆயிஷா மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை, ஆபரேஷன் தேர்வு முகாம் மஸ்ஜிதே ஆயிஷா தலைவர் டி.காஜாமொய்தீன் தலைமையில் நடைபெற்றது.

ஆயிஷா மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளரும் மஸ்ஜிதே ஆயிஷா தலைமை இமாமுமான முனைவர் மௌலவி ஏ.காஜா மொய்னுத்தீன் ஜமாலி, பள்ளி முதல்வர் வி.கௌரி தேவி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சென்னை சோசியல் லயன்ஸ் சங்க நிர்வாகி நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், துணைத்தலைவர் பயாஸ் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மஸ்ஜிதே ஆயிஷா செயலாளர் எம்.அப்துல் லத்தீப், பொருளாளர் எஸ்.எல். முகம்மது ஆஷிக் அலி, துணைத்தலைவர் ஹாபிழ் டி.அக்பர் பாஷா, துணைச் செயலாளர் எம்.நாகூர் அனிபா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஜாகீர் உசேன், இ.சேட்டு, என்.அப்துல் வாஹித், ஏ.ஷாநவாஸ், எம்.சாகுல் அமீது, ஏ.கலீல் ரஹ்மான் உள்ளிட்ட மாணவ-மாணவிகள், ஆசிரிய - ஆசிரியைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் 104 பேருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்ததில் 10 பேர் அறுவை சிகிச்சைக்கும் 25க்கும் மேற்பட்டோர் இலவச மூக்கு கண்ணாடிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!