செங்குன்றம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
செங்குன்றம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.
செங்குன்றம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கரத்தீயை10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த செங்குன்றம் லட்சுமிபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் குடோன் உள்ளது. இங்கு சுமார் 15.க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த பிளாஸ்டிக் குடோனில் அதிகாலையில் திடீரென தீப்பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சென்னை செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 10 தீயணைப்பு வாகனங்களில்50.க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவென பரவி முழுவதுமாகக கரும்புகை சூழ்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நீண்ட நேரம் போராடியும் தீ கட்டுக்குள் வராததால்,ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பிலாஸ்டிக் குடோனின் ஒரு பக்கத்தில் உள்ள தடுப்புகளை இடித்து அகற்றி தீயை முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
மேலும், சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் அவர்களின் உதவியோடு தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.சுமார் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பிலாஸ்டிக் பொருட்கள் இந்த தீ விபத்தில் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகாலை நேரம் என்பதால் இந்த பிலாஸ்டிக் குடோனில் ஊழியர்கள் யாரும் உள்ளே இல்லை எனவும், தீக்காயமோ, உயிர்சேதமோ ஏதும் ஏற்படவில்லை எனவும், தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே தீ விபத்திற்கான காரணம் தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாகவே போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த பெரும் தீ விபத்தானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu