செங்குன்றம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 அடி நீள பாம்பு மீட்பு

செங்குன்றம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 அடி நீள பாம்பு மீட்பு
X

செங்குன்றம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 அடி நீள பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்.

செங்குன்றம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 அடி நீள பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று காலை சாரை பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருப்பதை கண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் அலறியடித்து ஓடினர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் செங்குன்றம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மதிற்சுவர் பொந்துக்குள் ஒளிந்து கொண்டிருந்த ஆறடி நீள சாரைப்பாம்பை ஒருவழியாக பிடித்தனர்.

சாரைப் பாம்பு பிடிபட்டதும் அங்குள்ள மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிடிபட்ட சாரைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!