செங்குன்றம் அருகே 1.50 டன் ரேஷன் அரிசி கடத்திய 5 பேரை கைது செய்தனர்

செங்குன்றம் அருகே 1.50 டன் ரேஷன் அரிசி கடத்திய   5  பேரை கைது செய்தனர்
X

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக பிடிபட்ட ஐந்து பேர்

செங்குன்றம் அருகே ஆந்திராவிற்கு ரேஷன் அரிசையை கடத்த முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்தி விசாரிக்கின்றனர்

செங்குன்றம் அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். 5பேரை கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் லாரி ஒன்றில் மூட்டைகளை ஏற்றுவதை கண்டு சந்தேகமடைந்து அதில் சோதனை மேற்கொண்டனர். அப்போது லாரியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து 1.5 டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்த முயன்ற விஜயலட்சுமி, அல்லம்மா, கீதா, மூனீஸ்வரன், விஸ்வநாதன் ஆகிய 5பேரை கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளிலும் கடத்தல் காரர்கள் வாங்கி தொடர்ந்து ஆந்திராவிற்கு கடத்தி வருகின்றனர் ஏழை மக்களுக்காக வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை வீடு வீடாக சென்று குறைந்த விலைக்கு வாங்க அதிக விலைக்கு விற்று வருகின்றனர் எனவே இது போன்று ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.




Tags

Next Story
ai and iot in healthcare