மெத்தனாயலை கள்ளக்குறிச்சிக்கு கடத்தியதாக 4 பேர் கைது
செங்குன்றம் அருகே கள்ளக்குறிச்சிக்கு 330 லிட்டர் மெத்தனாயலை கடத்தியவர்கள், கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான வடபெரும்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் குடோனில் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
பின்னர் தடை செய்யப்பட்ட கெமிக்கல் பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து சோதனை செய்த செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் 4 நபர்களை கைது செய்த நிலையில் அவர்களிடமிருந்து ஆய்வு செய்வதற்காக தடை செய்யப்பட்ட மெத்தனால் மற்றும் மூலப் பொருட்களை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மெத்தனாலை கள்ளக்குறிச்சிக்கு 330 லிட்டர் அளவிற்கு டியூப்களில் அடைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த மாதேஷ் என்பவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கௌதம், மாதவரம் பகுதியைச் சேர்ந்த பான்ஜிலால் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார், பரமசிவம் ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
கள்ளச்சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்கின்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். இதனை அடுத்து இவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் 4 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மாதேஷ் என்பவருக்கும் இவர்களுக்கும் தொடர்பை உறுதி செய்தனர். இவர்களிடம் மெத்தனாலை வேறு யாருக்காவது விற்பனை செய்தார்களா என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு அவர்களை சிபிசிஐடி அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். பின்னர் 4 நபர்களை சிபிசிஐடி அதிகாரிகள் சென்னை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu