தமிழகத்திற்கு 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 25 பாா்சல்களில் சென்னைக்கு வந்தது

தமிழகத்திற்கு  3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 25 பாா்சல்களில் சென்னைக்கு வந்தது
X

புனேவில் இருந்து சென்னைக்கு வந்த கொரோனா தடுப்பூசிகள்.

தமிழகத்திற்கு 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 25 பாா்சல்களில் மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து சோ்ந்தன.

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

அதிலும் 3 வது அலையிலிருந்து தப்பிக்க 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்வது அவசியம் என்று அரசு அறிவித்துள்ளதால்,பொதுமக்களும் மிகுந்த ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.

இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.எனவே தமிழ்நாடு அரசு,ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் ஒன்றிய அரசு போதிய தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்கவில்லை.இதையடுத்து தமிழக முதலமைச்சா்,பிரதமருக்கு எழுதிய அவசர கடிதத்தில்,தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு,சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில் இன்று மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றி மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு,ஒன்றிய சுகாதாரத்துறை விடுவித்துள்ளது.

அந்த 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 25 பாா்சல்களில் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு புனேவிலிருந்து வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தது.

Tags

Next Story
ai based agriculture in india