முத்துமாரியம்மன் ஆலயத்தில் 108.பால்குடம் எடுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு

முத்துமாரியம்மன் ஆலயத்தில் 108.பால்குடம் எடுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு
X

கிராண்ட்லையன் ஊராட்சி விஷ்ணு நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்திய பக்தர்கள்.

கிராண்ட்லையன் ஊராட்சி விஷ்ணு நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமி விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி. புழல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராண்ட்லையன் ஊராட்சி விஷ்ணு நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2-ம் ஆண்டு சித்திரை பௌர்ணமி விழா ஆலய நிர்வாகிகள் தலைவர் லெனின், ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கணபதி பூஜையுடன் விரதம் இருந்த சுமார் 108-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலயத்திலிருந்து தங்கள் தலையில் பால்குடம் சுமந்தபடி விஷ்ணு நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர். அதேபோல் அம்மனுக்கு தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதணைத்தொடர்ந்து அம்மனுக்கு வண்ணமலர்கள் மற்றும் திருஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கிராண்ட்லையன் ஊராட்சி மன்ற தலைவர் கமுதிஅரசு, வார்டு உறுப்பினர் லோகேஷ்வரிகார்த்திக் மற்றும் ஆலய நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், பபிதா, ரமணி, தேன்மொழி உள்ளிட்ட சுற்றுவாட்டார பக்ர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கினர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்