மூன்று ஆயிரம் தொழு நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி: அமைச்சர் தகவல்
சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் பேட்டியளித்தார். அருகில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்,
தமிழகத்தில் உள்ள மூன்று ஆயிரம் தொழு நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் துவங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரொனா சிகிச்சை அளிக்கும் வகையில் 6 படுக்கை வசதியுடன் கூடிய கொரொனா சிறப்பு பிரிவு மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டி கலத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ,தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர்.
தமிழகத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பாதித்து வந்த நிலையில் தற்போது தமிழக அரசு எடுத்து வர கூடிய தொடர் நடவடிக்கைகள் காரணமாக குறைந்து வருகிறது.
இரண்டாம் அலை நேரத்தில் தமிழக அரசு வைத்த கோரிக்கை அடிப்படையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில் பழமை வாய்ந்த சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி கலத்தை வழங்கி உள்ளனர் என்று தெரிவித்தார்.
அதே போன்று தமிழகத்தில் இரண்டாம் அலையின் பாதிப்பு குறைந்து வந்தாலும் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வருவதால் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு கொரோனா சிறப்பு மையம் பணிகள் துவங்கி உள்ளதாக தெரிவித்த அவர் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 79 ஆயிரம் ஆக்சிசன் படுக்கைகள் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
அதே போன்று தமிழகத்தில் துவங்கப்பட்ட மினி கிளினிக் மையத்தில் பணிபுரிந்து வந்த மருத்துவர்கள் கொரோனா சிறப்பு மையங்களில் பணியாற்றி வருகின்றனர் எனவே கொரோனா பாதிப்பு 5000 ஆயிரத்திற்கும் குறைவாக ஏற்படும் நேரத்தில் மீண்டும் மினி கிளினிக் செயல்படும் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் 1 கோடியே 15 லட்சம் நபர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்த அவர் இன்று மாலை 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வரவுள்ளதாக தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் உள்ள மூன்று ஆயிரம் தொழு நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் துவங்க உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இதுவரை 2382 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் 111பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu