நீா்வளத்தை அதிகரிக்க புதிய தடுப்பணைகள்; அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு

நீா்வளத்தை அதிகரிக்க புதிய தடுப்பணைகள்;  அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு
X

நீா்வளத்துறையின் செயல்பாடுகள், மற்றும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின்.

நீா்வளத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பணைகள், நீா் நிலைகளை உருவாக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

நீா்வளத்துறையின் செயல்பாடுகள், மற்றும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வா் ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா்.நீா்வளத்தை அதிகரிக்கும் வகையில், புதிய தடுப்பணைகள், நீா் நிலைகளை உருவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள நீா்நிலைகளைப் புனரமைத்து, துார்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும். புதிய நீா் நிலைகளை உருவாக்குவதுடன், மழைநீா் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாகச் சேமித்துப் பயன்படுத்த வேண்டும். அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீா் சேமிப்பு கட்டுமானங்களை, குறிப்பாக தடுப்பணைகளை உருவாக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அத்திக்கடவு அவினாசி நீா்ப்பாசனம், நிலத்தடி நீா் செறிவூட்டுதல் மற்றும் குடிநீா் வழங்கும் திட்டம், மேட்டூா் சரபங்கா நீரேற்றுத் திட்டம் ஆகிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டம் கழுவேலி ஏரி, செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரி ஆகியவற்றை மீட்டெடுக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரவருணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும். நொய்யல் உபவடிநில புதிய கட்டளைக் கால்வாய், ராஜவாய்க்கால், கீழ்பவானித் திட்டம், கல்லணைக் கால்வாய், காவிரி உபவடிநிலம் ஆகியவற்றில் புனரமைப்புத் திட்டங்களை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

நீா்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பணைகள், புதிய நீா் நிலைகளை உருவாக்கிட வேண்டும்.விவசாயிகளின் நலன் கருதி பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் இருக்கும் நீா் நிலைகளைச் செப்பனிடுவதுடன், கால்வாய்களைச் சரி செய்யும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்க முதல்வா் ஸ்டாலின் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!