திரு.வி.க. நகரில் வீட்டு பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை மாயம்

திரு.வி.க. நகரில் வீட்டு பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை மாயம்
X
சென்னை திரு.வி.க. நகரில் வீட்டு பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை திருவிக நகர், வெற்றி நகர், ஜெயராம் தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், வயது 28. இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் தனது தந்தை தாஸ் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கார்த்திகேயனுக்கு திருமணம் பேசி முடிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் 21 ம் தேதி, பெண் வீட்டில் இருந்து வந்து கார்த்திகேயன் வீட்டில் திருமணம் பேசி முடித்து விட்டு சென்றுள்ளனர்.

அதன் பிறகு, வீட்டில் இருந்தவர்கள் தங்க நகைகளை கழட்டி வீட்டில் இருந்த பீரோவில் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் காலை திருமணத்திற்காக புடவை எடுக்க காஞ்சிபுரம் செல்வதற்காக வீட்டில் இருந்தவர்கள் புறப்பட்ட நிலையில் பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, திருவிக நகர் குற்றப்பிரிவில் கார்த்திகேயன் புகார் அளித்தார். பீரோ மற்றும் வீட்டின் கதவுகள் எதுவும் உடைக்கப்படாமல் பீரோவில் இருந்த தங்க நகைகள் மட்டும் மாயமாகி உள்ளதால், வீட்டில் இருந்த யாரேனும் தங்க நகையை திருடி உள்ளனரா, அல்லது வேறு யாராவது வந்து எடுத்துச் சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!