டெல்லி திமுக புதிய அலுவலக பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தயாராகி வரும் திமுக கட்சி அலுவலக கட்டுமானப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முடி
அதன்படி டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில், திமுக கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013-ஆம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. அலுவலக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu