உயிர் காக்கும் தடுப்பூசி உங்களுக்கு திருவிழாவா..? ஸ்டாலின் ஆவேசம்
கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து வருவதால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 'திகா உத்சவ்' என்னும் தடுப்பூசி திருவிழாவும் அரசு சார்பில் நடைபெற்றது.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தடுப்பூசிகள் உரிய நேரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வராதது, சுமார் 5.84 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என பொறுப்பின்மையை பா.ஜ., அரசு காட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கம் தடுப்பூசி போடுவதை 'திருவிழா' என பெயர் சூட்டி பிரதமர் மோடி தனது அரசின் நிர்வாகத் திறமையின்மையை திசை மாற்றுகிறார்.
தமிழகத்தில் இதுவரை 40.21 லட்சம் பேருக்கும் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. போடப்படும் தடுப்பூசியின் அடிப்படையில்தான் சப்ளை என்று மத்திய அரசு முடிவு எடுத்திருந்தால், அதை அதிமுக அரசு ஏன் எதிர்க்கவில்லை? தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிமுக - பாஜ., அரசுகள் தோல்வியடைந்துவிட்டன. தமிழக மக்கள் அனைவரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்கி, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பதிவிட்டு உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu