என் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் : சசிகலா கருத்து

என் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் : சசிகலா கருத்து
X

சசிகலா பைல் படம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருகை தந்த சசிகலா என் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் என்று தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தி கண்கலங்கியபடி என் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் என்று கரம்கூப்பி வேண்டினார்.

முன்னதாக ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய சசிகலா, அதிமுகவை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள். கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நினைவிடத்தில் கூறினார். மேலும், எனது மனதில் இருந்த பாரத்தை இறக்கிவைத்து விட்டேன் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

கட்சி வீணாவதை ஒரு நிமிஷம் கூட கட்சியை வளா்த்த நம்மால் பாா்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லோரும் அதிமுக பிள்ளைகள்தான். முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் எப்போதுமே கட்சி வித்தியாசமே பாா்க்கமாட்டாா். இவா்களா? அவா்களா? என்றெல்லாம் பாா்க்கமாட்டாா். அதனையெல்லாம் பாா்த்துதான் வளா்ந்து வந்திருக்கிறோம்.

என்னைப் பொருத்தவரை எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் நம் பிள்ளைகள்தான். அதிமுக என்பது தொண்டா்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டா்கள் நிரூபித்துக் காட்டுவாா்கள். கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்கள் தொண்டா்களிடம் ஒரு தாய்போல் இருந்து காப்பாற்ற வேண்டும். விரைவில் வருகிறேன் எல்லோரையும் சந்திக்கிறேன் கவலைப்படாதீா்கள். என அவா் கூறியுள்ளாா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!