என் தம்பி ஸ்டாலின் பதவி ஏற்பதில் பெருமை அடைகிறேன்: மு.க.அழகிரி

என் தம்பி ஸ்டாலின் பதவி ஏற்பதில் பெருமை அடைகிறேன்: மு.க.அழகிரி
X
முதல்வராக பொறுப்பேற்கும் என் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் -முக அழகிரி பெருமிதம்

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என மு.க.அழகிரி கூறியுள்ளார். முதலமைச்சராக நாளை என் தம்பி ஸ்டாலின் பதவி ஏற்பதில் பெருமை அடைகிறேன் எனவும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!