கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!
X

சென்னை உயர்நீதிமன்றம்.

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. எனவே இதில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று பொதுநல வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் கொரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறோம்.

அரசின் கொள்கை முடிவு தொடர்பாக இதுபோன்ற சில பொதுநல வழக்குகள் விளம்பரத்திற்காக தொடரப்படுகின்றன. கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிலைமையைக் கட்டுக்குள் இருப்பதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது'' என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா